1880ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஆங்கிலேய பாதிரிமார்களால் பாடசாலை ஒழுங்கமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்த கால கட்டத்தில் தான் 1882ஆம் ஆண்டு ஆங்கிலேய பாதிரியார் ஜோன் கில்னரால்; இப் பாடசாலை குடியிருப்பு கிராமத்தில் தனியார் பாடசாலையாக ஆரம்பிக்க பட்டது. இப்பாடசாலை ஆரம்பிக்கும் போது இருந்த மாணவர் தொகை 55 ஆக காணப்பட்டது. இதில் ஆண்கள் தொகை 30 ஆகவும் பெண்கள் தொகை 25ஆகவும் காணப்பட்டது. அத்துடன் ஆசிரியர் எண்ணிக்கை 01 ஆகவும் காணப்பட்டது. இப்பாடசாலை முதலாம் இரண்டாம் வகுப்புக்களுடன் ஓர் ஓலை குடிசையில் ஆரம்பிக்க பட்டதாக பல தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இன்று ஓர் 1யுடீ பாடசாலையாக 600 ற்கு மேற்பட்ட மாணவர்களையும்இ 30 ஆசிரியர்களையும் கொண்டதாக அதிபர் வழிகாட்டலில் பல பௌதீக வளங்களைக் கொண்ட ஓர் முன்னோடிப் பாடசாலையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இங்கு கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் தமிழர்களாகவும் சைவம் கத்தோலிக்கம கிறிஸ்தவம் ஆகிய மதங்களைக் கடைப்பிடிப்பவர்களாகவும் காணப்படுவதுடன் அனைத்து மாணவர்களும் குடியிருப்பு, சவுக்கடி கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதுடன் வேறு சில மாணவர்கள் ஏனைய இடங்களில் இருந்து வருகை தருபவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களில் 20 இற்கும் குறைவானோர் அரச தொழில் செய்பவர்களாகவும் ஏனைய 80 இனரும் மீன்பிடித் தொழிலும்இ கூலித்தொழிலிலும் ஈடுபடுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இப் பாடசாலைக்கு பாடசாலை சமூகத்தின் உதவி ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெற்றாலும் இது இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றது என்பது தெட்டத் தெளிவான நிலையாகும்.







