மட் / குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது 28/02/2025 ஆறுமுகத்தான் குடியிருப்பு சக்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு அதிபர் திரு.S.D. முரளிதரன் தலைமை வகிக்க, பிரதம அதிதியாக பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திரு.S. நவநீதன் கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு அதிதியாக திரு. S. பிரகாஷ் (விளையாட்டு திணைக்களம், கிழக்கு மாகாணம்) அவர்களும், கௌரவ அதிதிகளாக திரு. T. ராஜமோகன் (கோட்டக்கல்வி அதிகாரி), திரு. V. லவக்குமார் (உதவிக்கல்விப் பணிப்பாளர், உடற்கல்வி ), விசேட அதிதிகளாக திரு. K. ரவீந்திரன் (ஆசிரிய ஆலோசகர், உடற்கல்வி), திரு. P. மதியழகன் (இணைப்பாளர் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்) என பலரும் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகள் தம் திறமையினை வெளிப்படுத்திய நிகழ்வாக இது அமைந்தது.






